பக்கம்:மறைமலையம் 8.pdf/361

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

336

மறைமலையம் -8 – 8

சமயவுண்மைகட்படுங் கேன முதலான உபநிடதப்பொருள் விரிவும், தத்துவவுண்மைக்கட்படும் உள்ளது போகாது இல்லது வராது, சகளோபாசனை என்பனவும், பௌதிக நூற்பொருளின் கட்படும் மெய்ந்நலவிளக்கம் என்பதும், இலக்கண இலக்கியப் பொருட்பகுப்பின்வழிப்படும் வடமொழி யிலுள்ள தமிழ்ச் சொற்காரணம், தொல்காப்பிய முழு முதன்மை, நாலடியார் வரலாறு முதலாயினவும் இனிது எடுத்து விளக்கலுற்றது. இங்ஙனந்தான் செல்லலுற்ற நெறிபிறழாது இப்பத்திரிகை பிரசுரிக்கப்படுதலை உணர்ந்து பொறாமையுற்று அவம்படு வாரான போலிப்புலவர் இரண்டொருவரும் ஒரோ வொரு பத்திராதிபரும் இதனைப் புறம்பழித்துத் தமக்கு வந்தவா றெல்லாம் கூறினார். தமது பத்திரிகையும் சமயசாத்திர தத்துவசாத்திர பௌதிகசாத்திர இலக்கண இலக்கியப் பொருள் விரிப்பதென முன் ஒன்று மொழிந்து பின் அவ்வரிய பொருள்களுள் ஒன்று தானுஞ்செவ்வனே விளக்கமாட்டாமல் வழுமலிந்தனவும் பயன்பெரிதில்லனவும் தற்பெருமை நிரம்பினவும் பிரசுரித்துத் தம்பத்திரிகைக்கு இழுக்கந்தேடும் அப்பத்திராதிபர் பொறாமையுரைபற்றி ஈண்டுவரக்கடவதோர் குற்றமில்லை. இன்னுந் தத்துவ இரகசியார்த் தங்களெல்லாம் அறிவொருங்கி நியாயமாகக் காணமாட்டாத இரண்டோர் போலிப்புலவர் புறங்கூறுங் குரைப்புரைகளை அறிவுடையார் செவிமடாது அகன்று ஒழுகுவாராகலின், அப்போலிப்புலவர் தம் மோடொத்த போலிமாக்களைக் கூட்டிவைத்துக்கொண்டு நம்மையும் நம் பத்திரிகையினையும்பற்றிக் குரைத்து ஆரவாரிக்கும் அவர் குழறுபாட்டுரையினை ஒருபொருளாக வெண்ணி அவற்றிற்கு எல்லாம் மறுமாற்றம் மொழிந்திலம். அவர் "கூவலாமை குரைகடலாமையைக் கூவலோ டொக்குமோ கடல்” என்பதேபற்றித் தம்மையுந் தம்மினத்தையும் வியந்து தம்முள்தாமே மகிழ்ந்து ஒழிக. இதுகிடக்க.

66

இனி

னி

இப்பத்திரிகை மேற்கொண்ட கருத்துக்கு இணங்கநுண்பொருள்கோத்து உரைகளெழுதி இதன்கண்

களான

அவற்றைப்பிரசுரிக்க உதவிபுரிந்த நம் ஆப்தவித்துவாசிகாமணி ஸ்ரீமது அ-குமாரசுவாமிப்பிள்ளை, ஸ்ரீமத், டி சவரிராயபிள்ளை, ஸ்ரீமத்-திருமயிலை-சண்முகம்பிள்ளை, ஸ்ரீமந்-மாகறல்-கார்த்திகேய முதலியார், ஸ்ரீமந்-மு-

ராக

-

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_8.pdf/361&oldid=1574787" இலிருந்து மீள்விக்கப்பட்டது