பக்கம்:மறைமலையம் 8.pdf/370

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஞானசாகரம்

மேலும், பாணினிமுனிவர்

99

345

தமது அட்டாத்தியா

யியின்கண் வியாதர் பிக்ஷுசூத்திரங்கள் இயற்றினாரெனக் கூறுகின்றார். பிக்ஷுக்க ளெனப்படுவோர் பௌத்த சந்நியாசி களாவர்; ஆகவே, அவர்க்குரிய பெளத்தசமயநெறியினை விளக்கும் பொருட்டு எழுதப்பட்டன பிக்குசூத்திரங்கள் என்று கோடலுமாம்; மாயாவாதம் பிரசன்னபௌத்தமென வழங்கப்படு மாதலின், அங்ஙனம் நூல்செய்தமைநோக்கி 'மாயாவாதநூல் செய்தவன் வியாதன்' என்று சொல்லப் பட்டதென்று கோடலே பொருத்த மாமென்க. இன்னுங் கந்தபுராணம் இயற்றிய கச்சியப்பசிவா சாரியார் இப்பெற்றி யெல்லாம் இனிதுணர்ந் தன்றே “ஏத்திடுசுருதிகளிசைக்கு மாண்பொருள், மாத்திரைப் படா வெனா மாசில்காட்சியர், பார்த்துணர்பான்மைபாற் பலவகைப் படச் சூத்திரமானவுஞ் சொற்றுவைகினான் என்று அதனியல்பு வரையறுத் தோது வாராயினதூஉமென்க. இதனுள், சுருதிப் பொருள் நிச்சயம் பெறாமல் பலரும் பலவகையாலு ணருமாறு இடஞ்செய்து கிடந்தமையால், அஃதங்ஙன மாகாமை உண்மைப்பொருள் தெளித்தற் பொருட்டு அதனுண் பொருளெல்லாம் ஒருபிண்ட மாகத் திரட்டி வேதாந்தசூத்திரம் செய்தருளினாரென்றும், அது சீவபரபேதங்களை விளக்கும் பல வகுப்புடையதாய்ப் பொலிவுபெற்றதென்றும் சொல்லப்பட்ட வாறுகாண்க; ஈண்டுப் ‘பலவகை’ என்றது மறைமொழிபோற் றலை மயங்கிக்கிடவாமல் அது பல அத்தியாயவகுப்புடைத்தாய் நிற்றலை. இங்ஙனம் பொருள் கொள்ளவறியாது ‘பலவகைப் பட' என்பதற்குப் பல்சமயத்தாருந் தத்தமக்கிணங்கப் பல பொருள்கொள்ளுமாறு என்று பொருளுரைப்பார்க்குச் சுருதிப் பொருள் பஃறலைப்பட்டு மயங்கிக்கிடத்தலின் அதனுண்மைப் பொருள் தேற்ற மற்றிவ்வேதாந்தசூத்திர மியற்றுவாராயின ரென்னும் மேலைவாக்கியப்பொருளோடு அஃதியையாமை யானும், அச்சுருதிப்பொருளைப்போலவே மயக்கந் தருதற் கேதுவாகப் பின்னும் ஓர் நூலியற்றினா ரென்றல் அவர் பெருமைக் கேலாமையானும் அன்றி அங்ஙனமியற்று தலாற்போந்த பயன்றான் என்னை யெனுங்கடா நிகழுமாத லானும் அது பொருந்தாதென மறுக்க. அது கருத்தாயிற் 'பலபொருள்' என்று தெளியக் கூறுவார்மன்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_8.pdf/370&oldid=1574796" இலிருந்து மீள்விக்கப்பட்டது