பக்கம்:மறைமலையம் 8.pdf/378

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

353

66

பரிமேலழகியாருரை யாராய்ச்சி

“குடம்பை தனித்தொழியப் புட்பறந் தற்றே யுடம்போ டுயிரிடை நட்பு”

(குறள் - 338)

திருக்குறள் நிலையாமை அதிகாரத்தில் யாக்கைக்கும் உயிர்க்குமுளதாம் இயைபு இனைத்தென வறிவுறுத்துகின்ற மேலைத்திரு வாக்குக்குப் பரிமேலழகியாருரைக்கு முரையே சிறந்ததெனவும், அவர்க்குமுன்னே தொல்லாசிரியர் கூறிய வுரை அதற்கு இணக்கமின்றாய் வழுப்படுகின்றதெனவும் இஞ் ஞான்றைத் தமிழ்ப்புலவர் கடைப்பிடித்துப் போதருகின்றார். அதுவேயுமன்றிப் பரிமேலழகியார் இச்செய்யுட்கு உரை உரைக்கின்றுழி இவரோடொருங்கிருந்து அதனைக்கேட்ட

ஆசிரியர்-நச்சினார்க்கினியர்

தாமதற்குரைத்த

வுரை

இயைவதன்று மற்றிதுவே யதற்கியையும் விழுமியவுரை யாமென மொழிந்து அவரைத் தழீஇக்கொண்டாரெனவும், இங்ஙனம் இந்நுட்பவுரை விரித்தவழிப் பரிமேலழகியார் இவர்ந்த வெண்கலப்பரி அடிபெயர்த்தியங்கிற்றெனவும் ஒரு பொய் வரலாறு புகலுகின்றார். ஆசிரியர் - நச்சினார்க்கினியர் திருக்குறளுக் குரையெழுதியிட்டாரென அவருரைப்பாயிரங் கூறாமையானும், அவரும் பரிமேலழகியாரும் ஒருகாலத்தின ரேயாமென்பதனை நிறுத்தும் ஆதாரம் பிறிதின்மையானும், அவரிவருவரும் ஒருகாலத்தினரல்ல ரென்பதற்குச் சில பலகாரணங்கள்புலப்படுதலானும் அவ்வரலாறு உண்மை யன்றாம். சமயம் வாய்க்கும் வழி ஆசிரியர் நச்சினார்க்கினியர் பரிமேலழகியார்க்கு முன்னிருந்த பெரியாரென்பது இனிது காட்டுவாம். ஈண்டு அத்திருக்குறட் செய்யுட்குப் பரிமேல ழகியார் கூறுமுரை பொருந்தாதென்பதும், தொல்லா சிரியருரையே அதற்கிணங்குவதாமென்பதும் சிறிது காட்டுவாம்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_8.pdf/378&oldid=1574804" இலிருந்து மீள்விக்கப்பட்டது