பக்கம்:மறைமலையம் 8.pdf/405

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

380

மறைமலையம் லயம் – 8

மேகத்தினின்றும் துளிகள்விழின் காண்பதல்லது, வீழா தாயின், அப்பொழுதே ஓரறிவுயிராகிய பசும்புல்லினது தலை யையுங் காணுதலரிது.

L

மழைக்கு முதலாகிய அளவில்லாத கடலும், நீர்வாழு முயிர்கள் பிறவாமையும், மணிமுதலாயின உண்டாகாமையு மாகிய தன்னியல்புகுறையும், மேகமானது அக்கடலை முகந்து அதன்கட் பெய்யாது விடுமாயின்.

அறம்பொருள் இன்பங்கள் நடத்தற்கு மழை ஏதுவாதல்.

மழை பொழியாதாயின் தேவர்கட்கும் இவ்வுலகத்தின் கண்ணே நித்தியத்தில் வரும் தாழ்வு தீரும்வண்ணம் மக்களாற் செய்யப்படும் நைமித்திகமென்னும் திருவிழாவோடு பூஜையும் நடவாது. நிமித்தத்தாலாவது நைமித்திகம். இதனால் விக்கிரக ஆராதனை பொருந்தாதென்பார் மதம் போலியாயிற்று.

இல்லறத்தார்

மழை வருஷியாதாயின் விரிந்தவுலகத்தின்கண்ணே பெரும்பான்மையும் அறவழியால்வந்த பொருள்களைப் பெரியராயினார்க்கு அகமகிழ்ச்சியோடு கொடுப்பதாகிய தானமும், துறவறத்தார் மனம் ஐம்பொறிவழி ஒழுகாது நிற்றற்பொருட்டு விரதங்களால் உண்டி சுருக்குதன் முதலிய தவமுமாகிய இரண்டறமும் நிலைபெற மாட்டாவாம். ஆசிரியர் சிவஞானயோகிகளும் ம் இவ்வருமைத் திருக்குறளை மேற்கோளாகக் கொண்டு முதுமொழி வெண் பாவில் “நேயபுகழ்த்துணையார் நீராட்டுங்கைதளர்ந் துன்றூய முடிமேல்வீழ்ந்தார் சோமேசா-வாயுங்கால்-தானந்தவமிரண்டுந் தங்காவியனுலகம், வானம்வழங்காதெனின்” என்று கட்ட ளை யிட்டருளினார்கள். இதன்பொருள் அவனையுடைய புகழ்த் துணைநாயனார் அபிடேகஞ்செய்யுங்கை தளர்ச்சியடைந்து உனது பரிசுத்தமாகிய திருமுடியில் வீழ்ந்துவிட்டார்; சோமோ என்னுந் திருநாமத்தினையுடைய சிவபெருமானே ஆராயு மிடத்து மழைபொழியாதாயின் விரிந்தவுலகத்தின் கண்ணே இரண்டறங்களும் நிலைபெற

தானமுந்தவமுமாகிய

மாட்டாவாம்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_8.pdf/405&oldid=1574831" இலிருந்து மீள்விக்கப்பட்டது