பக்கம்:மறைமலையம் 8.pdf/406

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஞானசாகரம்

புகழ்த்துணைநாயனார் சரித்திர சங்கிரகம்

381

செருவிலிபுத்தூரிலே வாழும் சிவப்பிராமணகுலத் துற்பவராய்ப் புகழ்த்தும் யாரென்னும் திருப்பெயர்கொண்டு மிகுந்த சிவநேசத்துடன் சிவலிங்கப்பெருமானை ஆகம விதிப்படி பூசைசெய்து வருநாளில் மழைபெய்தலொழிந்து தேசமெங்கும் பஞ்சம் நேரிட்டு உணவுகிடைப்ப தருமையாய்ப் பசிவருத்தவும் அன்பினுறுதிப்பாட்டிலே சிவபூசை நியதி தவறாம லிரவும் பகலுங் செய்துவந்தனர். இப்படியிருக்க ஒருநாள் திருமஞ்சனஞ் செய்யும்போது பசிவருத்துஞ் சரீர தளர்ச்சியினால் கையிலிருந்த திருமஞ்சனக்குடந்தவறிச் சுவாமி திருமுடியில் விழுந்துவிடவே மிகுந்ததுயரங்கொண்டு சோர்வுற்றவருக்குச் சிவகிருபை யினாலே நித்திரைவர அப்போது பரமசிவன் அவனுடைய சொப்பனத்தி லெழுந் தருளி இந்தப்பஞ்சம் நீங்குமளவும் உனக்கொரு காசு வழங்கு கிறோமென்று அருளிச்செய்ய இடர்தீர்த் தெழுந்து பரம சிவத்தின் றிருவருளால் பீடத்தின்கீழொரு பொற்காசு இருக்கக்கண்டு எடுத்துக்கொண்டு மகிழ்ச்சி யடைந்து சிவ பூசை தவறாமல் செய்துகொண்டிருந்து சிவலோகஞ் சேர்ந்தனர்.

எவ்வகை மேம்பாட்டார்க்கும் நீரையன்றி இம்மைக்கண் அநுவிக்கப்பட பொருள் இன்பங்களாகிய உலகியல் அமையாதென்பது எல்லாரானும் எளிதாக தெரியப்படுதல் போல, அந்நீர் எக்காலத்தும் எவ்விடத்தும் உளதாகல் மழையையின்றி அமையாதென்பதுந் தெளியப்படும்.

2-ம் அதிகாரம் சத்தியரூபம் முடிந்தது

இனி அவ்வற முதலிய பொருள்களை உலகிற்கு உள்ளவாறு உணர்த்தும்...குரவராகிய முற்றத்துறந்தமுனிவரது பெருமை கூறுகின்றார்.

ங்கே துறந்தவரென்றது தபசுவி, MMதீஷு,வித்துவான் என்னும் சந்நியாசிகள் மூவருள் நடுநின்ற விவிதீஷு என்பவரை தனிமையாக வமர்ந்து ஞான பூசையும் இரந்துண்டலுஞ்செய்து இடையறாது நிட்டைகூடுவோர் தபசுவி யென அறம்பொருள் இன்பம் வீடுபேறு என்பவற்றை மாணாக்கர்கட்கு உணர்த்த

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_8.pdf/406&oldid=1574832" இலிருந்து மீள்விக்கப்பட்டது