பக்கம்:மறைமலையம் 8.pdf/412

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

66

ஞானசாகரம்

387

ஆப்தவாக்கியம் ஆகமங்கள், லௌகிகம், வைதிகம், அத்தியான்மகம் அதிமார்க்கம், மாந்திரம் என ஐவகைப்படும். தற்காலத்திற் பயன்றருவது லௌகிகம்; காலாந்தரத்திற் பயன்றருவது வைதிகம்; ஆத்துமவிசார; வியற்கையது அத்தியான்மகம்; யோகவியற்கையது அதிமார்க்கம்; சிவஞான வியற்கையது மாந்திரம் எனப்படும். அவற்றுள், மாந்திரம் பிறநூல்களைப் பூர்வபக்ஷமாகக் கீழ்ப்படுத்தி, மேற்பட்டு விளங்கும் காமிகம் முதலிய சைவாகமங்கள். காமிகத்திலே 'சித்தாந்தம் மந்திரதந்திரமாகும்; அதிமார்க்கம் அதனிற் றாழ்ந்தது: அத்தியான்மகம் அதனிலுந்தாழ்ந்தது; அதனிலுந் தாழ்ந்தது வைதிகம்: வைதிகத்தினும் தாழ்ந்தது லெளகிகம் என்று சொல்லப்பட்டது. சைவாகமங்கள் வைதிகவாக்கியம் ஆதலின் அப்பிரமாணங்களென்று மூடசிரோன்மணிகள் சிலர் கூறுவர். அது, “வேதாந்த நிஷ்டைபெற்றுக் களங்கமற்ற ஞானி களும்எனது சிவாகமத்திலே தற்பரர்களாகி ஞானபாதத்திலே நின்றோருமாகிய இருதிறத்தாரும் பெறற்கரும் சாயுச்சியம் பெறுவார்கள்.'

6

இப்போதுசொல்லிய இருவகைமார்க்கங்களின் நெறியி னில்லாதவர்கள் நால்வகைத்தண்டத்திற்காளாவர். என்னும் சிவன்கூறிய பொருளையுடையவியாசவசனத்தினால் அது பேதைமை என மறுக்க. விரிப்பிற் பல்குமென்க.

இத்தகைய வசிட்டம்வாய்ந்த சிவாகமங்களைச்சிவதீக்ஷை

பெற்றே ஓதல்வேண்டும். இதற்குப்பிரமாணம் சுப்பிரபேதம் இந்தச்சைவாகம மெல்லார்க்குங் கொடுக்கத் தக்கதுமன்று. விளக்கத்தக்கதுமன்று; தீக்ஷைபெற்றவனாய், நிலையுடை யோனாய், சிவபக்திமானாய் இருப்பவனுக்கே விளக்கத்தக்கது. ஏ னையோர்க்கு விளக்கல் குற்றமென்க. என்பதனால் அறிக. இக்கலிகாலத்திலே இச்சிவாகமங்களைத் தங்கடங்கள்மனம் போனவாறு தீக்ஷைமுதலியனவின்றிக் கற்கவும், அவ்வாகமங் களிற் கூறிய பொருளைச் சற்குருசந்நிதானத்தில் கேட்காது தங்கடங்கள் யுக்திக்கிசைய விபரீதப்பொருளைக் கற்பித்தலும் ஆகிய இன்னோரன்ன தீநெறிகளையே அநேகர் கடைப் (இன்னும் வரும்)

பிடிக்கின்றார்கள்.' இணுவில் இந்துகுமாரசபை

இங்ஙனம் அ.சதாசிவதேவர்

இ.கு. சபைப்பிரசாரகர்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_8.pdf/412&oldid=1574838" இலிருந்து மீள்விக்கப்பட்டது