பக்கம்:மறைமலையம் 9.pdf/157

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

124

மறைமலையம் – 9

பேரும் புகழும் பொருளும் வளமும் பெற்று இனிது வாழ்ந்தவர். வெளிநாட்டில் வாழ்ந்த தமிழர்களும் விரும்பிய மாமேதை; தமக்குப் பின் தமது பணிகளைத் தொடர்ந்து செய்யும் மனவலிமை கொண்ட தமிழ் மறவர்களை உருவாக்கியவர்.

இத்தனை திறன்களும் உடைய அடிகளாரின் நூல்கள் 1950 முதல் 1970 வரை புகழ் பெற்றுப் பரவ முடியாத நிலை ஏற்பட்டது. 1. அடிகளாரின் நூல் வெளியீட்டு உரிமை பற்றி எழுந்த பூசல். 2. பகுத்தறிவு இயக்கம் சமயங்களை எதிர்த்ததால் ஏற்பட்ட தேக்கம்.

3. அடிகளார் இந்தியை எதிர்த்ததால் காங்கிரசுக் கட்சி ஆட்சி புறக்கணித்த நிலை.

இந்தக் காரணங்களின் விளைவுகள் தவிர்க்க முடியாதவை. காலத்தின் போக்கால் தோன்றியவை.

இவற்றை உணர்ந்து, வருங்காலத் செயலாற்றினால் பெரும் பயன் விளையும்.

தமிழகம்

அடிகளாரின் திறன்களில் ஒவ்வொன்று பற்றியும் தனி ஆய்வு செய்து பெருநூல் எழுதலாம்.

தொடங்கட்டும் அடிகளாரைப் பற்றிய ஆய்வுப் பணிகள்! தொடரட்டும் அடிகளார் தொடங்கி வைத்த நற்பணிகள்!

வளரட்டும் அடிகளார் தோற்றுவித்த தமிழ் நிலையங்கள்! வாழட்டும் அடிகளார் வளர்த்த இனமான உணர்வு! பரவட்டும் உலகெங்கும் அடிகளார் புகழ்!

- பேராசிரியர் மு.வை. அரவிந்தன்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_9.pdf/157&oldid=1579128" இலிருந்து மீள்விக்கப்பட்டது