பக்கம்:மறைமலையம் 9.pdf/206

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

* பட்டினப்பாலை ஆராய்ச்சியுரை

173

திருமால் குடியிற்றோன்றினோனென “இருநிலங் கடந்த திருமறு மார்பின், முந்நீர் வண்ணன் புறங்கடை யந்நீர்த், திரைதரு மரபினுரவோ னும்பல்” எனும் பெரும்பாணாற்றுப்படை யடிகளிற் கூறினாராகலின், அவ் வேந்தன்பாற் போம் பாணர்க்கு அவன் தன் குடித் தெய்வமாய் வழிபடுந் திருமாலைத் தொழுது செல்கவென அறிவுறுத்தருளினாராகலின் அது கடாவன்றென மறுக்க. இங்ஙனமன்றித் திருமாலைக் கூறினமையானே இவர் வைணவரா மெனின், “கருவி லோச்சிய கண்ணகன் எறுழ்த்தோட், கடம்பமர் நெடுவேள்” என்று முருகக்கடவுளையுங் கூறினாராகலின் இவர் சைவ சமயத்திற்குரியராம் போலுமென எதிர்மறுத்துரைப் வர்சைவ பார்க்கு இறுக்கலாகாமையின் அங்ஙனங் கூறுதல் வழுவுரையா மென்க. இவ்வாற்றால் இவர் இன்ன சமயத்தவர் எனத் துணிபுரை விரித்தற்கு வலிய சான்றின்மை காட்டப்பட்டதாகலின், இவர் சமயம் இதுவென்பது துணியப்படாது போலுமென்க.

அற்றாயினும், இவரது பெயரின் றன்மையை உற்று நோக்குமிடத்து இவர் சைவசமயத்திற்குரியார் என்பது புலப்படு கின்றது. 'உருத்திரங்கண்ணனார்' என்னுஞ் சொற்றொடர் உருத்திரனுக்குக் கண்போற் சிறந்த இளைய பிள்ளையாரான முருகக் கடவுளைக் குறிப்பதொன்றாம். சைவசமயந் தழீஇ யொழுகுங் குடியிலுள்ளாரே அப்பெயரிட்டு வழங்குதல் மரபாய்ப் போதரக் காண்டலின், இவ்வாசிரியர் சைவசமயத்திற் குரியராம் போலுமெனக் கூறல் இழுக்காது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_9.pdf/206&oldid=1579434" இலிருந்து மீள்விக்கப்பட்டது