பக்கம்:மறைமலையம் 9.pdf/277

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

244

21.

30.

35.

  • மறைமலையம் – 9

ஆற்றின் வாரார் ஆயினும் ஆற்ற

ஏனை உலகத்தும் இயைவதால் நமக்கென

மானமர் நோக்கங் கலங்கிக் கையற்று ஆனாச் சிறுமையள் இவளுந் தேம்பும் இகன்மீக் கடவு மிருபெரு வேந்தர் வினையிடை நின்ற சான்றோர் போல இருபே ரச்சமோ டியானும் ஆற்றலேன்

கொடுப்பினன் குடைமையுங் குடிநிரல் உடைமையும்

வண்ணமுந் துணையும் பொரீஇ எண்ணாது

எமியேந் துணிந்த ஏமஞ்சால் அருவினை

நிகழ்ந்த வண்ணம் நீநனி உணரச்

செப்ப லான்றிசிற் சினவா தீமோ

நெற்கொள் நெடுவெதிர்க் கணந்த யானை முத்தார் மருப்பின் இறங்குகை கடுப்பத் துய்த்தலை வாங்கிய புனிறுதீர் பெருங்குரல் நற்கோட் சிறுதினைப் படுபுள் ஓப்பி ஏற்பட வருதியர் எனநீ விடுத்தலிற்

40.

கலிகெழு மரமிசைச் சேணோன் இழைத்த

புலியஞ் சிதணம் ஏறி அவண

சாரற் சூரல் தகைபெற வலந்த

கிளிகடி மரபின ஊழுழ் வாங்கி

45.

தழலுந் தட்டையுங் குளிரும் பிறவும்

உரவுக்கதிர் தெறூஉம் உருப்பவிர் அமயத்து

விசும்பாடு பறவை வீழ்பதிப் படர

நிறையிரும் பௌவங் குறைபட முகந்துகொண்டு

அகலிரு வானத்து வீசுவளி கலாவலின்

முரசதிர்ந் தன்ன இன்குரல் ஏற்றொடு

50. நிரைசெலல் நிவப்பிற் கொண்மூ மயங்கி இன்னிசை முரசிற் சுடர்பூட் சேஎய்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_9.pdf/277&oldid=1579538" இலிருந்து மீள்விக்கப்பட்டது