பக்கம்:மலடி பெற்ற பிள்ளை.pdf/40

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சசி, இவ்வளவு நாட்களாக நீ இதை என்னிடம் சொல் லவே இல்லையே! அது என்ன உன் குடும்பத்தையே உலுக்கிய கவலை?” - 'காணுமல் போன சுபத்ரா என்ற என் தங்கையைப்பற்றிய கவலேதான்!” 'இரண்டு வருஷங்களுக்கு முன் போனவளா இ ன் னு ம் திரும்பவில்லை?” “ஆம்; அவள் இறந்துவிட்டாள் என்று நாங்கள் தீர்மானித் துக் கொண்டோம். என் தாயிடமும் அப்படியே சொல்லிவிட் டோம். அவள் இருக்கிருள் என்று இன்று நினைத்தாலும் என் தாயார் திடீரென்று மனம் குன்றிப்போய் விடுகிரு.ர்கள்.” கண்ணப்பனுக்கு இது ஒரு அதிர்ச்சியாகத்தான் இருந்தது. கண்ணப்பன் அடைந்திருந்த அதிர்ச்சியை தபால்காரனின் மணிச்சத்தம் கலைத்தது. தபால்காரன் ஒரு கடிதத்தைக் கண் ணப்பனிடம் கொடுத்தான். அது கண்ணுத்தாளிடமிருந்து வந்த கடிதம். கண்ணப்பனுக்கு அவள் மீதிருந்த கோபத்தினல் அந்தக் கடிதத்தை நெருப்பு வைத்துக் கொளுத்திவிட நினைத்தான். "சண்டாளி, ஏதாவது போலிச்சமாதானத்தை எழுதியிருப் பாள்; என்னதான் அ வ ள் எழுதியிருந்தாலும் நான் அதை நம்பப்போவதில்லை, ஒரு டாக்டரின் பரிசோதனைக்கு பிறகுஉனக்கு இனிமேல் கருத்தரிக்க வழியே இல்லை என்று சொன்ன பிறகு இவளுக்கு வளைகாப்பு வருகிறதென்ருல் இதைவிட ஒரு புருஷனுக்கு மானக்கேடான சம்பவம் உண்டா?- என்ற மனக் குமுறலுடன் அவன் அந்தக் கடிதத்தை பிரித்தான். ஆன ல் அதில், - - 'அன்புள்ள அத்தான் அவர்களுக்கு வணக்கம். நேற்று என் தகப்பனரின் தபால் உங்களுக்குக் கிடைத்திருக்கும். அதைப் பார்த்ததும் அளவில்லாத ஆனந்தம் அடைந்திருப்பீர்கள். நாம் எர்ணுகுளத்திற்குப் போன முகூர்த்தமாக நமக்குக் குழந்தை 33