பக்கம்:மலடி பெற்ற பிள்ளை.pdf/43

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தெய்வத்தை இகழ்ந்து விட்ட பக்தனைப் போல் தலையில் அடித் துக் கொண்டான். அடு த்த வீட்டுக்குத் தெரியாமல் வாழ்பவன் கூட தன்னை துன்பம் தாக்கும் போது தாங்கிக்கொள்ள முடியா மல் அடுத்த தெருவுக்கே கேட்கும்படி அலறி விடுகிருன். அதி ம் கோழை மனம் படைத்த செல்லப் பிள்ளைகளின் உள்ளம் இம்மாதிரி நேரங்களில் உடைந்து நொறுங்கி பின்னிக்கிடக்கும் முருக்கைப் போல கலகலத்து விடுகின்றன. சற்று முன்பு சண் யாகத் தெரிந்த கண்ணுத்தாள் இப்போது கண்ணப்ப னுக்குத் தேவதையாகத் தெரிந்தாள்.

என்ஆன மன்னித்துவிடு கண்ணு! உன்னே எவ்வளவு சீக் கிரத்தில் நான் லேசாக எடைபோட்டு விட்டேன். மலடி என்ற அவச் சொல்லே நீ துடைத்துக் கொள்வதற்காகப் புரு ஷனே நெருப்பாற்றில் தள்ளிவிட்டாயே என்று நான் உன்னைப் பற்றிப் போட்டுக் கொண்ட கணக்கு எவ்வளவு தவருகப் போய் விட் டது கண்ணு! என்னைச் சாவிலே இருந்து ஒரு நொடியில் காப் பாற்றிய உன்னை நான் என்றும் தலைகுனிய விடமாட்டேன்” என்று தனக்குள்ளே ஏதோ தீர்மானித்துக் கொண்டவனுய் இட்டுக்குள் ஒடி கண்ண்த்தாளுக்கு பதில் கடிதம் எழுதினன் கண்ணப்பன். - . . - -

கண்ணப்பனிடமிருந்து யாருக்கும் கடிதம் வரவில்லையே என்று எல்லோரும் திகைத்துப் போயிருந்தார்கள். ஒரு வாரத் திற்குப் பிறகு கண்ணுத்தாளுக்கு ம ட் டு ம் அவனிடமிருந்து கடிதம் வந்தது. - 'பிரியமுள்ள கண்ணுவுக்கு, உன் கடிதம் கிடைத்தது. அந் தக்கடிதம் என்ன மறுபிறவி எடுக்க வைத்து விட்டது. தக்க நேரத்தில் உன் கடிதம் வந்து சேர்ந்திராவிட்டால் நம் இருவரு டைய வாழ்க்கையிலும் விபரீத விளைவுகள் ஏற்பட்டிருக்கும். கண்ணு, கடிதத்தில் எதையும் விரிவாக எழுதவேண்டா மென்று நினைத்துச் சுருக்கமாகவே எழுதியிருக்கிறேன். உன்னை எல்லோருமாகச் சேர்ந்து கர்ப்பவதியாக்கி விட்டார்கள் என்று மட்டும் எனக்குப்புரிகிறது. அதுவும் ஒருவகைக்கு நல்லதுதான். 42