பக்கம்:மலடி பெற்ற பிள்ளை.pdf/45

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கண்ணப்பன் தம்பி சொக்கநாதனும் வளைகாப்பிற்கு வந் திருந்தான். கண்ணப்பன், சொக்கநாதனைச் சந்தித்து இரண்டு வருஷங்களுக்கு மேலாகிவிட்டது. கண்ணப்பன், எர்ணுகுளத் திற்கு போவதற்கு ஒரு ஆண்டுக்கு முன்பு சொக்கநாதன் விசா கத்திருநாளுக்கு ஊருக்கு வந்திருந்தபோது இருவரும் சந்தித்துக் கொண்டார்கள். அதற்குப் பிறகு கண்ணுத்தாளின் வளைகாப்பு விழாவில்தான் அவர்கள் சந்திப்பு ஏற்பட்டது. சொக்கநாதன் கவர்ச்சியானவன். கண்ணப்பனவிடத் திட காத்திரமானவன். சுருட்டை மயிர், ஆடை உடுத்துவதிலும் அலங்காரம் .ெ ச ய் து கொள்வதிலும் சிறு பிள்ளையிலிருந்தே சொக்கநாதனுக்கு அதிக நாட்டமுண்டு! சுருட்டைமயிர் நன்ருகப் படியவேண்டும் என்பதற்காகத் தலைக்குக் கரடிக்கொழுப்புப் போட்டுக் கொள்வான். அன்று முழுவதும் நறுமணம் வீசவேண்டும் என்று எண்ணி சட்டையில் அவினேலியா சென்ட் தடவிக்கொள்வான். அடிக்கடி புதுச் செருப்பு மாற்றுவதும் அவனுக்கு வாடிக்கை. காகிதத்தகடு போன்ற வாயல் வேஷ்டிகளே அவனுக்குப் பிடிக்கும், கையில் ஒற்றைக்கல் வைர மோதிரம் அணிந்திருப்பான். இரண்டு வருஷங்களுக்கு முன் ஒரு அரசகுமாரனைப்போல் விளங்கிய சொக்கநாதன் முகத்தில் இப்போது அருள் இல்லை. பூச்சி விழுந்த இலையைப் போல் அவன் சுருங்கியிருந்தது. அவன் சிரி ப் பும் நடவடிக்கைகளும் செயற்கையாகவே இருந்தன. சொக்கநாதன் ஏன் இப்படி ஆகிவிட்டான்? அவன் உடலுக் குள்ளே ஏதாவது நோய் புகுந்து கொண்டு அவனை ஆட்டிப் படைக்கிறதா? - கண்ணப்பனுக்கு இப்படியெல்லாம் ஒரு சிந்தனை. . - - சொக்கு: “வந்திட்டேன்!” "என்ன உன் உடம்புக்கு? ஏதாவது வைத்தியம் செய்து கொள்வது தானே? 44