பக்கம்:மலடி பெற்ற பிள்ளை.pdf/50

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

விபச்சார மாளிகை நடத்துவது: யாராவது அவரைக்கேட்டால் 'வட்டிக் கடைக்காரன் பணத்தை வாடகைக்கு விடுவதைப் போல சைக்கிள் கடைக்காரன் சைக்கிளே வாடகைக்கு விடு வதைப்போல நான் ரதிக்கிளி மாதிரிப் பெண்களை வாடகைக்கு விடுகிறேன்; இதுவும் ஒரு தொழில் தானே திருடினல் குற்றம், கொலை செய்தால் குற்றம் பிறருக்கு இன்பத்தைக் கொடுத்து அதற்கு பணம் வாங்கிக்கொள்வது எப்படி குற்றமாகும்? சுவை யான ஹோட்டலில் சாப்பிட்டால் ஏற்படும் திருப்தியைவிட எனது மாளிகைக்கு வந்தால் அதிகமான மனத்திருப்தி கிடைக் கும்’ என்று விளக்கம் தருவார் ராவுத்தர். ராசாக்கிளிக்கு என்றைக்கும் போலீசில் பயம் இருந்ததில்லை ஏனென்ருல் ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமைகளிலும் ராசாக்கிளி யின் வசந்த மண்டபத்திற்கு வராத போலீஸ் அதிகாரிகளே இல்லை. சுபத்ரா திருநெல்வேலிக்கு வந்து பத்து நாட்களாகி விட் டன. அசோகவனத்துச் சீதையைப்போல ராசாக்கிளி அவளைத் தனிமைப் படுத்திவைத்திருந்தார். இடையிடையே தூதுகள், மிரட்டல்கள் நடந்தன. எதற்கும் சுபத்ாா பணியவில்லை. ‘சுபத்ரா, நான் யாருக்கும் இவ்வளவு அவகாசம் அளித்த தில்லை! இன்னும் இரண்டே தினங்கள் உனக்குத் தருகிறேன். அதற்குள் உன் மனதை நீ சரிப்படுத்திக் கொள்ளவேண்டும். எனக்கு ஐந்து வருஷங்களாகக் கைராசிக்காரராக இருந்துவரும் காசியப்பர் நாளை மறுதினம் வருகிருர்’ என்று எச்சரித்துப் போய் விட்டார் ராசாக்கிளி. - அந்த நாளு ம் வந்து விட்டது. காசியப்பர் ஜவ்வாதுப் பொட்டு கமகமக்க குறித்த நாளில் வந்து விட்டார். ராசாக்கிளி காசியப்பருக்கு புது மாப்பிள்ளேக்கு அணிவிப் பதைப்போல் மாலை அணிவித்து வரவேற்ருர். மாடியில் சுபத்ராவின் அறையில் வாசனைகள் தெளிக்கப் பட்டிருந்தன. ஊதுபத்திகள் ஒரு பக்கம் கண்ணிரைப் புகை 49