பக்கம்:மலடி பெற்ற பிள்ளை.pdf/70

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தரவர்த்தி என்று அவள் பச்சை குத்தியிருந்தாள். இன்சிை முத்து அதை ஒரு முறை படித்துப் பார்த்துவிட்டு திரும்பத் திரும்ப வாயால் முணுமுணுத்துக் கொண்டிருந்தார். அவர் அந்த ஊருக்கு வந்து பொறுப்பேற்றதும் “வீட்டு வேஜலக்காரியைக்கூட விட்டு வைக்கமாட்டார்” என்று தசரதச் சக்கரவர்த்தியைப் பற்றிக் கேள்விப்பட்ட குறிப்புக்கள் அவ ருடைய உள்ளத்தில் கோடு கிழித்துக் கொண்டேயிருந்தன. சடலத்தை மருத்துவ பரிசோதனைக்கு அனுப்பி அதனுடைய கருத்தை அறிந்தார். இன்னசிமுத்து. சடலத்தில் ஊமைக்கா யங்கள் இருப்பதாகவும் அந்தப் பெண் சுருளச் சுருள அடித்துக் கொல்லப்பட்டிருப்பதாகவும் டாக்டர்கள் எழுதியிருந்தார்கள். அதற்குப் பிறகுதான் இன்னசிமுத்து கொலைவழக்கைப் பதிவு செய்தார். . . . . இன்னசிமுத்து, அவருடைய உத்தியோக காலத்தில் எந்த வழக்கிலும் தோல்வி கண்டதில்லை. அவர் நேர்மையில் துளியும் விலகியதில்லை. சொந்தம், நட்பு, தயவு, தாட்சண்யம் எல்லா வற்றையும் வீட்டில் இறக்கி வைத்துவிட்டுத்தான் ஸ்டேஷனுக் குப் போவார். இந்த வழக்கில் அவர் சபதம் எடுத்துக் கொண் டிருந்தார். குற்றவாளியைக் கண்டுபிடித்து அவனே த் தூக்கு மேடைக்கு அனுப்பியே தீர்வேன் என்று அவர் விடுத்த வீரசய தம் அந்த நகரத்தின் மூலே முடுக்குகளெல்லாம் எதிரொலித்துக் கொண்டிருந்தது. • . தசரதச் சக்கரவர்த்தி என்று செல்லமாக அழைக்கப்பட்ட திரு. தசரதன் செட்டியார் கொச்சியிலுள்ள அவரது கடையில் இரண்டும்ாதம் தங்கிவிட்டு ஊருக்குத் திரும்பியிருந்தார். அவர் இல்லாத நாட்களில் ஊரில் என்ன நடந்தது என்று அவருக்குத் தெரிய நியாயமில்லை அல்லவா! அதல்ை தசரதன் செட்டியார் வழக்கம்போல் அவ்ரது காரியங்களில் ஈடுபட்டிருந்தார். வட்டிக் கடை, கமிஷன் கடை, மரக்கடை, விவசாயம் - இப்படிப் பல தொழில்கள் தசரதனுக்கு எல்லாமே அவரது நேரடிப்பார்வை யில் நடந்து வந்தன. . . . . . . . . 70