பக்கம்:மலருக்கு மது ஊட்டிய வண்டு.pdf/27

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கே. பி. நீலமணி

25

கே. பி. நீலமணி 25.

"அதாவது, முதல்லே நாம் ஏத்திண்ட ஒர் அகல் விளக்கைக் கையிலே எடுத்துண்டு, வரிசையா இருக்கற விளக்குக்கெல்லாம், ஒண்ணிலேருந்து இன்னொண்ணு, அதிலேயிருந்து இன்னொண்ணு. இப்படிப் பத்து நூறு , ஆயிரம், லட்சம்னு ஏத்திண்டே போக; எங்கும் ஜெகத் ஜோதியாய், ஒளி வெள்ளமாய்த் திகழ்கிறபோது; கையிலே இருந்ததைக் கீழே வெச்சுட்டா, அந்த ஆதி முதல் விளக்கு, எங்கே எதோட கலந்து போச்சுன்னு யாருக்காவது புரியுமோ, இல்லே, பிரிச்சுக் கண்டுபிடிக்கத் தான் முடியுமோ?

  • எப்படி ஒர் அகல் விளக்குக்குள்ளே லட்சம், பத்து லட்சம், கோடி அகல் விளக்குகள் அடங்கியிருந்ததோ: அப்படி அந்த லட்சமும், கோடியும், புதிதாய் பிறந்து அந்த ஒர் அகல் விளக்குக்குள்ளேயும் அடக்கமில்லையா? இப்படித் தான் கலைகளின் வளர்ச்சியும். ஒண்ணிலேருந்து, ஒருத்தரி லேயிருந்து கோடானு கோடி.'

பாகவதர் கூறியதை அவர்கள் சிரத்தையோடு கேட்டுக் கொண்டிருக்கும்போது, 'சார் , போஸ்ட்' என்கிற தபால்காரரின் குரல் கேட்டு சோபியா வேகமாகத் திண்ணைக்குச் சென்று கடிதத்தையும், ஒரு பாக்கெட்டை யும் கையெழுத்திட்டு வாங்கி வந்தாள்.

"எங்கேயிருந்து வந்திருக்கு?’’ 'அமெரிக்காவிலிருந்து.'

"யார், பாபு எழுதியிருக்கானா...?' கல்யாணி அம்மாள் ஆர்வம் பொங்கக் கேட்டாள்.

"கொஞ்சம் பொறு. அவள் கவரை உடை க்கட்டும்.'"

'உங்கள் சிஷ்யர் டேவிட் எழுதியிருக்கிறார் ஐயா. ' சோபியா கூறினாள்

'என்ன எழுதியிருக்கான்?'