பக்கம்:மலருக்கு மது ஊட்டிய வண்டு.pdf/29

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கே. பி. நீலமணி

27

கே. பி. நீலமணி 27°

'கடிதத்தில் அப்படித்தான் எழுதியிருக்கிறது, மிடில் டவுன்", மான்சென்டர்', கன்னெக்டிக்ட்', 'சிகாகோ இங்கே எல்லாம் அவர் பாடின கச்சேரியைப் புகழ்ந்து பத்திரிகைகளில் வந்திருக்கிறதாம். அந்த பேப்பர் கட்டிங்கையெல்லாம் டேவிட் அனுப்பியிருக்கிறார்.'

ஆச்சரிய மிகுதியால் பாகவதர் பிரமித்துப் போய் உட்கார்ந்து விட்டார் சாப்பிட எடுத்த கவளம் அப்படியே கையில் இருந்தது. பாபுவாவது கச்சேரி பண்ணுவதாவது: இங்கிலீஷ் பாட்டுக்குத் தாளம் போட்டுக் கொண்டிருந் தவன் யார் கிட்டே, எப்போது இந்த சங்கீதத்தைக் கற்றுக் கொண்டான் '

ஏன் சோபா, பாபு ஏதோ வியாபார சம்பந்தமான ரெண்டு வருஷ படிப்புக்குன்னா அமெரிக்கா போறதாச் சொல்லிட்டுப் போனான்?’ என்று கேட்டாள் கல்யாணி அம்மாள்,

"வியாபாரத்துக்காகவும் தான் போனார். ஆனால் அங்கே டேவிட், தன்னோட செல்வாக்கினாலே பாபுவுக்கு நிறையக் கச்சேரிகள் ஏற்பாடு செய்திருக்கிறார்.'

ஏற்பாடுகள் செய்யறது இருக்கட்டும். கச்சேரி பண்றதுக்கு இவனுக்கு என்ன தெரியும்?'

"கொஞ்சம் முன்னே நீங்கள் அகல் விளக்கு தத்துவம் சொல்லவில்லையோ, அதுதான் உங்கள் பிள்ளையின் வாழ்க்கையிலேயும் நடந்திருக்கிறது. உங்களுடைய அந்த வாரிசு வரிசையிலே வந்திருக்கிறவர்தான் ஐயா பாபுவும்.'

சோபியாவினுடைய இந்த பதில் பாகவதருக்குப் புரிவது போலவும்; புரியாதது போலவும் இருந்தது.

"கொஞ்சம் விவரமாகச் சொல்லேன் சோபா. என்றார் பாகவதர்.