பக்கம்:மலருக்கு மது ஊட்டிய வண்டு.pdf/33

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கே. பி. நீலமணி

31

ஒடும் ரயிலில் ஒரு சரணாகதி
      1. L=#LLE####____*__*

"ஊ" என்ற பேரிரைச்சலுடன் பம்பாய் மெயில் இருளைக் கிழித்துக்கொண்டு வேகமாகச் சென்று கோண் டிருந்தது. இரு பக்கங்களிலிருந்தும் வருகிறசிலு சிலுத்த வாடைக் காற்றும் கடக்-கடக், கடக்-கடக்' என்று ஒரே கதியில் ஒலிக்கிற ஒசையும், தாலாட்டுவது போன்ற வண்டி யின் சீரான அசைவும், உள்ளே இருப்பவர்களுக்கு உறக் கத்தின் போதையை ஊட்டியது.

வண்டி திருவள்ளுரில் நின்றபோது ஒரு நெரிசலான 'கம்ப்பார்ட்மெண்டில்’, இளைஞனான அந்த டிக்கெட் எக்ஸாமினர் நுழைந்தான். சில நிமிஷ நேரச் சோத னைக்குள் டிக்கெட் இல்லாத ஒரு இளம் பெண்ணைக் கீழே இறக்கி நிறுத்துகிறான்.

அந்தப் பெண் மழையில் நனைந்தபடி, கையில் ஒரு தோல் பெட்டியுடன் தீவிரமாக யோசித்தபடி சற்று ஒர மாக நின்றுகொண்டிருந்தாள். தனக்கேற்பட்ட இந் நிலைக்கு வெட்கப்படுவது போவிருந்தது அவளது முக

LITT GAILD •

டி. டி. இ. அவளை நெருங்கினான். மீண்டும் ஒரு முறை அந்த அழகியை நன்றாக உற்றுப் பார்க்கவேண்டும் போன்றதோர் ஆர்வம் அவனைத் துாண்டியது. ஆயினும் தனக்குரிய மிடுக்குடன், அதிகார தொனியில் கேட்டான்: