பக்கம்:மலருக்கு மது ஊட்டிய வண்டு.pdf/36

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

34

மலருக்கு மது ஊட்டிய வண்டு

34 மலருக்கு மது ஊட்டிய வண்டு

ஒய்ந்திருக்க வேண்டும் என்பதை, துடைத்தும் மறையாத கன்னத்தில் படிந்திருந்த கண்ணிர்க் கோடுகள் லேசாக அவனுக்கு உணர்த்தியது. ஆனால், அவன் அதை கவனித்ததாகவே காட்டிக் கொள்ளவில்லை.

அரக்கோணத்தை விட்டுப் புறப்பட்ட வண்டி, வேக மாய்ப் போய்க் கொண்டிருந்தது, இனி அடுத்து ஒன்றரை மணி நேரம் கழித்து-அதாவது இரவு ஒரு மணிக்கு மேல் ரேணிகுண்டாவில் தான் நிற்கும். அவனையும் பாக் கெட்டில் நிறைய வாங்கி வந்திருக்கும் ஸ்வீட்டும் காரமும் மான பலகாரங்களையும் பார்த்து ஒரு கணம் அவள்

திடுக்கிட்டுப் போனாள்.

டிக்கெட்டில்லாத ஒரு பிரயாணியிடம் நடந்து கொள்ள வேண்டிய கடுமைகளைக் காட்டாமல், மரணத்தறுவாயிலுள்ள தன் தாயைச் சென்று காண உதவும்படி தான் வேண்டிக் கொண்ட ஒரு சரணா கதியைத் தவறாகப் புரிந்து கொண்டோ, அல்லது வேண்டு மென்றே தவறான எண்ணத்துடன் தன்அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்வதே போல் தன்னை முதல் வகுப்பு வண்டியில் ஏற்றியபோதே அவள் சந்தேகப்பட்டாள். இப்போது அ வ னு ைட ய செய்கை, அ ந் த சந்தேகத்தை ஊர்ஜிதம் செய்வது போலிருக்கவுமே, அவள் அதிர்ந்தே போனாள்.

எதிரில் இருந்த பொட்டலங்களை ஒவ்வொன்றாய்ப் பிரித்தபடி அவன் கூறினான்: "எங்கே நீ தூங்கிப் போயி ருப்பியோன்னு பயந்தபடி வேகமாக வந்தேன். இந்தா... எடுத்துக்கோ பலகாரத்தை அவளிடம் நகர்த்தினான்.

அவனுடைய இந்தப் பரிவு வேண்டாததாக-விரும் பத்தகாததாக-இருந்தாலும், அது அவளுள் ஏதோ செய்தது; புறக்கணிக்க முடியவில்லை. எதற்காகாகவோ. தான் அவனிடம் கடமைப்பட்டிருப்பது போன்றதொரு