பக்கம்:மலருக்கு மது ஊட்டிய வண்டு.pdf/38

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

36

மலருக்கு மது ஊட்டிய வண்டு

36 மலருக்கு மது ஊட்டிய வண்டு

முனைவான் என்று அவள் எதிர்பார்க்கவில்லையே! அவன் உள்ளம் நடுங்கியது.

அதற்காக திடீரென்று இறங்கி ஒடவும் முடியாது

அம்மாவைப் பார்க்க வேண்டுமானால் அவனோடு தான் பிரயாணம் செய்தாக வேண் டும்!

'உன் அம்மாவுக்கு ஒன்றும் நேர்ந்து விடாது. தைரியமா யிரு. ஆமாம்...இவ்வளவு நேரமா நீ உன் பெயரைச் சொல்லவே இல்லையே உன்பெயரென்ன? எந்த ஊர்?

அவள் தலை நிமிர்ந்து அவனை ஒரு முறை பார்த்தாள். பிறகு நிதானமாக, பேரை மட்டுமல்ல, தனது வாழ்க்கைக் கதையே ஒரு குறிப்பிட்ட பகுதியிலிருந்து ஆரம்பித்து, ஒரு சுவாரஸ்யமான கட்டம் வரை மிகச் சுருக்கமாகவும், மனத்தில் பதியும் படியும் தெளிவாகக் கூறிக் கொண்டிருந். தாள். அவன் அவளது முகத்தையே ஆவலோடு பார்த்த, படி சுவாரஸ்யமாகக் கேட்டுக் கொண்டிருந்தான்.

'குத்தி அருகே உள்ள ஓர் ஆத்திரக் கிராமத்தில் பிறந்தவள் அவள். பெற்றோருக்கு ஒரே மகள். சிறு வயதிலேயே தந்தையை இழந்து விட்ட அவளை எவ்வள வோ கஷ்டங்களுக்கு மத்தியில் தாயார் தான் படிக்க வைத்து ஆளாக்கினாள். திருமணத்திற்கான ஏற்பாடுகள் ஏனோ கடந்து கொண்டே போய்; அதற்காக இருந்த சொல்ப நிலத்தையும் விற்றுச் சாப்பிட்டாயிற்று.

குடும்பத்தின் சிரமம் காரணமாக அவளது தாய் வயதையும் மறந்து, வேலைக்குப் போய் வந்தாள். இது மகளுக்குப் பிடிக்கவில்லை. சிறுகச் சிறுக இப்படி ஒட்டை அடைத்துக் கொண்டிராமல், ஒரேயடியாக நிமிர, தான் சினிமாவில் சேர்ந்து ஒரு ஸ்டார் ஆகி விடுவது தான் சிறந்த மார்க்கம் என அவள் எண்ணினாள்.