பக்கம்:மலருக்கு மது ஊட்டிய வண்டு.pdf/59

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கே. பி. நீலமணி

57

கே. பி. நீலமணி 57

முடியாத புத்திரபாசம் கணப் பொழுதிற்குள் பேரலை போல் நெஞ்சத்தினுள் கிளர்ந்தெழுந்து அவரை புரட்டி எடுத்தது. நடையின் வேகம் குன்றி அவர் தடுமாறினார்.

லட்சக்கணக்கான சொத்து; ஏழு தலைமுறைகளுக்கு உட்கார்ந்து சாப்பிடலாம். ஆனால் அப்படி உட்கார்ந்து சாப்பிட வேண்டியவன்; தவமிருந்து பெற்றபிள்ளை. தள்ளாத காலத்தில் தங்களை புறக்கணித்து விட்டு ஒடிப் போய்விட்டானே!

சம்பந்தம் பிள்ளை கஞ்சப் பேர் வழித்தான். ஆனால் அதற்காகப் பணத்தின் பின்னால் ஒடுபவர் என்று அர்த்த மல்ல. வீண் ஆடம்பரமும், படாடோபமும் அவரிடம் கிடையாது. அவரைப் பார்த்தால் மளிகைக் கடைக் குமாஸ்தா என்றுதான் அறியாதவர்கள் எண்ணுவார்களே தவிர லட்சாதிபதியான பா ல த ண் டா யு த ப ா னி புரவிஎடின்ஸ் அதிபர் என்று சொன்னால் கூட நம்ப மாட்டார்கள். அத்தனை அடக்கம்.

கஷ்டப்பட்டு தானே சேர்த்த சொத்து. அதனால் பணத்தின் அருமை தெரியாதவர். எதிலும் கண்டிப்பும் நேர்மையும் எதிர்பார்ப்பவர். ஆனால் அதுவே அவரு டைய துன் பத்திற்குக் காரணமாக அமைந்து விட்டது.

தன்னுடைய கடையில் வேலை செய்யும் ஒவ்வொரு சிப்பந்தியும் ஹரிச்சந்திரனாக இருந்தே ஆக வேண்டும் என்று எதிர்பார்ப்பவர் அவர். இப்படி இல்லாதவனுக்கு அங்கே வேலை இல்லை. ஒவ்வொரு சிப்பந்திக்கும் கடின மான பரீட்சை வைத்துத்தான் இறுதியில் தன் ஸ்டோரில் 'பெர்மனெண்ட் ஆக்குவார்.