பக்கம்:மலருக்கு மது ஊட்டிய வண்டு.pdf/64

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

62

மலருக்கு மது ஊட்டிய வண்டு

{2 மலருக்கு மது ஊட்டிய வண்டு

கவனித்தேன். சாட்சாத் கருணாகரனேதான். பிரமாத மாக டிரஸ் செய்துகொண் டு ஆள் பார்ப்பதற்கு ராஜா மாதிரி நின்று கொண்டிருந்தான். கறுப்புக் கண்ணாடி வேறே! என்ன இருந்தாலும் பழக்கமான முகம் மறந்தா போகும்?

ஏதோ ஒரு பெரிய கம்பெனியில் நல்லவேலையில்தான் இருக்க வேண்டும் என்று மட்டும் புரிந்தது. சரி அவனை இப்போதே விசாரித்துவிடலாமா, அல்லது தியேட்ட ருக்குள் போய் சாவதானமாகப் பேசிக் கொள்ளலாமா", என்று நான் யோசித்துக்கொண்டிருக்கும்போதே திடீ ரென்று அவனைக் காணவில்லை.

'இப்படிக் காத்திருந்து, காத்திருந்து எதிர்பாராத விதமாக ஒருநாள் கண்டும் பேசமுடியாமல் போய் விட்டது. ஆனாலும் ஒன்று- கருணாகரன் நிச்சயமாக பம்பாயில், அதுவும் இந்த வட்டாரத்தில்தான் எங்காவது வசிக்கவேண்டும். கண்டுபிடித்து விடலாம் என்ற நம்பிக்கையுடன்தான் உங்களுக்குக் கடிதம் எழுதினேன்’’ என தாமோதரன் கூறி முடித்தார்.

அதைக் கேட்டதும் அப்போதே கருணாகரனைக் கண்டுவிட்டது போலவும், அவனோடு கஞ்சனுாருக்குச் சென்று இறங்கும் தன்னைக் காமாட்சி ஆரத்தி சுற்றி வரவேற்பது போலவும் அவர் உள்ளத்தில் கனவுகள் பெருக்கெடுத்து ஓடின. அந்தக் கனவின் இறுதியை, மிகவும் அருமையாக பிள்ளை முடித்திருந்தார்.

ஊருக்குப் போனதுமே, ஒரு கால் கட்டையும் கட்டி, தன் கடைச் சாவியையும் அவன் கையில் ஒப்புவித்து விடுகிறார். அவர்கள் அடுக்கடுக்காகப் பெற்றுப்போடும் பேரன் பேத்திகளைக் கொஞ்சிக்கொண்டே காமாட்சியும் தானும் இறுதி நாட்களைக் கழித்துவிடுவது- இதுதான் அந்தக் கனவின் (புடிவு.