பக்கம்:மலருக்கு மது ஊட்டிய வண்டு.pdf/65

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கே. பி. நீலமணி

63

கே. பி. நீ லமணி

ஆனால் இதெல்லாம் நனவாக வேண்டுமானால்...

மழையையும், வெய்யிலையும், பசியையும், தாகத்தை யும் பாராமல், பம்பாய் வீதிகளில் பிள்ளை, மகனைத் தேடி அலைந்து கொண்டிருந்தார். தாமோதரனும் அவருக்குப் பூரணமாக உதவி செய்தார். மாமாவோடு ஆரம்பத்தில் ஒரு வாரம் லீவு போட்டுவிட்டுத் தேடினார்: ஆபீஸ் நண்பர்களிடம் எல்லாம் அடையாளம் சொல்லி வைத்திருந்தார்.

இதற்குள் பம்பாய், அந்தச் சுற்றுவட்டாரம் எல்லாம் தனக்கு ஒரளவு பழக்கம் ஆகிவிட்டதுபோல் சம்பந்தம் பிள்ளைக்குத் தோன்றியது. ஆனால், அவர் தனியே வெளியே வெகு நேரம் வரைச் சென்று வருவதை தாமோதரன் விரும்பவில்லை.

"மாமா, கருணாகரனைத் தேடிப் பிடித்து உங்கள் கையில் ஒப்புவிக்க வேண்டியது என் பொறுப்பு. நீங்கள் ஊருக்குப் புதிசு. தனியே போகக்கூடாது. இந்த பம்பாய் பொல்லாத ஊர். பஸ்ஸும் லாரியும் எமனாகத் திரியும், மேலும் பணத்தோடு ஒருவன் தனியே அகப்பட்டால் அபேஸ்தான்' என்று தாமோதரன் எச்சரிக்கை செய்து,

பயமுறுத்திக் கூடப் பார்த்தார். ஆனால், அவர் கேட் டால்தானே!

என்னை ஒரு பயல் அசைக்க முடியாது மாப்பிள்ளே. நான் கேடிக்குக் கேடி; நல்லவனுக்கு நல்லவன். என்னைப் பற்றிக் கவலைப்படாமெ ஆபீஸுக்குப் போங்க என்று சமாதானம் கூறி அனுப்பிவிட்டார். ஆனால் உண்மையில் ஒருநாள், தாமோதரன் கவலைப்பட்டது போலவே ஆகிவிட்டது.

பொடி நடையாகவே, பம்பாயின் அழகை ரசித்த வண்ணம், மகனைத்தேடிப் புறப்பட்டுப் போய்க்