பக்கம்:மலருக்கு மது ஊட்டிய வண்டு.pdf/68

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

66

மலருக்கு மது ஊட்டிய வண்டு

66 மலருக்கு மது ஊட்டிய வண்டு

நின்று விட்டவனை கண்டு பிள்ளை ஒரு கணம் நடுங்கியே போனார். ஆயினும் அவர் தன்னுடைய அச்சத்தை வெளிக்காட்டாமல் மறைத்துக் கொண்டு ஆளை நோட்டம் விட்டார்.

எங்கே எப்படி பதிலுக்குத் தாக்கி மடக்கலாம் என்பதிலேயே அவர் மனம் லயித் கிருந்தது- இடையிலே கைலி அதைச் சுற்றி ஒரு தடித்த தோல் பில்டு, கையிலே கத்தி, கழுத்திலே தாயத்து அதன் மேல் ஒரு கைக்குட்டை, கன்னத்திலே ஒரு ஒரு கறுப்பு பெரிய மச்சம். நீண்ட மீசை, கண்களிலே முகமூடி வேறு-இத்யாதி அவலட்சணத்திற்கு கிரீடம் வைத்தாற்போல் தலையிலே முண்டாசு வேறு!

தொழிலுக்கேற்ற நல்ல உடம்புதான்-என்று அவர் எண்ணிக் கொண்டிருக்கும்போதே கேடி ஹிந்தியில் மிரட்டினான்: "மரியாதையாய் பணத்தையெல்லாம்

கழட்டாவிட்டால் உயிரோடு போகமாட்டாய்' என்று.

பாஷை அவ்வளவாகப் புரியாவிட்டாலும்பிள்ளைக்கு அரையும் குறையுமாக விஷயம் ஒரளவு விளங்கிவிட்டதுபனம் போன பிறகு உயிர் எதற்கு? பணம்தானே ஜீவ நாடி. அதை இவனிடம் கொடுத்துவிட்டுப் போவ தாவது!-பிள்ளையும் சளைக்கவில்லை. கோபத்தோடு தான் கூறினார்.

என்னிடம் சல்லிக்காசு கிடையாது. நீ எது வேண்டு மானாலும் செய்து கொள். ஆனால் என்னைக் கொன் றால் உனக்குத்தான் நஷ்டம்; கத்தியை அலம்ப சோப்பு வாங்கக்கூடக் காசு தேறாது!’-என்று துணிந்து அவ னுக்குப் புரிந்தாலும் சரி, புரியாவிட்டாலும் சரி-நேரம் போனால் சரி; அதற்குள் யாராவது உதவிக்கு வரமாட் டார்களா என்று-அவனிடம் பேச்சுக் கொடுத்துக் கொண்டே சமயம் பார்த்து குபிர்’ என்று மூக்கில்