பக்கம்:மலருக்கு மது ஊட்டிய வண்டு.pdf/7

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மலருக்கு மது ஊட்டிய வண்டு

வாசலை நோக்கியுள்ள தன்னுடைய மாடி அறையில் ஜன்னல் ஒரமாகப் போடப்பட்டிருந்த கட்டிலில் இருக் கையும் கிடைக்கையும் அற்றதொரு நிலையில், தலை மாட்டில் அடுக்கி வைத்திருக்கும் தலையணையில் சாய்ந்தபடி படுத்துக் கொண்டிருந்த பாகவதர், திரை நீக்கப்பட்டிருந்த ஜன்னல் வழியே வெளியுலகைப் பார்த்துக் கொண்டிருந்தார்.

நீரில் கரைகிற உப்பைப் போல, பார்த்துக் கொண் டிருக்கும்போதே படிப் படியாகப் பொழுது புலர்வது கண்ணுக்குத் தெரிந்தது.

அறையின் கதவு திறக்கப்படுகிற சப்தம் கேட்டுத் திரும்பிப் பார்த்தார் பாகவதர். கையில் ஆவி பறக்கிற காப்பியை ஏந்தியபடி சோபியா உள்ளே நுழைந்தாள்.

இவ்வளவு கருக்கலில், அதற்குள் குளித்துப் புத்தாடை கட்டிக் கொண்டிருந்த அவளது தோற்றத்தை பாகவதர் வியப்போடு பார்த்தார். - ---

தலை ஈரத்தை உறிஞ்சுவதற்காக முடிச்சில் துவட்டிய துண்டை முடிந்து கொண்டிருந்தாள்.

'இந்தப் பாங்கெல்லாம்கூட இவளுக்கு எப்படி வந்தது?"