பக்கம்:மலரும் உள்ளம்-1.pdf/101

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சின்னச்சின்னப் பறவையான சிட்டுக்குருவி, தேடித்தேடித் திரிவதென்ன ? சிட்டுக்குருவி. என்னவேண்டும் ? என்னவேண்டும் ? சிட்டுக்குருவி. என்னிடம்நீ சொல்லவேண்டும், சிட்டுக்குருவி. உணவுதேடித் திரிகின்றாயோ ? சிட்டுக்குருவி. ஊக்கமது கைவிடாத சிட்டுக்குருவி. பணமும்வேண்டாம்; காசும்வேண்டாம் சிட்டுக்குருவி. பச்சைநெல்லை நான்தருவேன், சிட்டுக்குருவி. 95

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மலரும்_உள்ளம்-1.pdf/101&oldid=859404" இலிருந்து மீள்விக்கப்பட்டது