பக்கம்:மலரும் உள்ளம்-1.pdf/104

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஒன்பது மாதம் சென்றதுமே 'உப்புப் புப்பெனக் கூறிடுவாள். அம்மா சொல்வதை அழகாக அந்தக் குழந்தையும் கூறிடுமாம். 'என்றன் குழந்தை ஊமையென எவரும் கூறார் எண்மகிழ்வாள். 萤 爱 蟾 பத்து மாதம் ஆனதுமே தத்தித் தத்தித் தவழ்ந்திடுமாம். அத்துடன் நிற்கப் பழகிடுமாம். அம்மா அதனைக் கண்டதுமே, 'என்றென் குழந்தை சப்பாணி இல்லை' என்றே மகிழ்ந்திடுவாள். 安 莺 安 அப்புறம் ஒருசில மாதங்கள் ஆனதும், அந்தக் குழந்தையுமே, நன்றாய் நின்று, நேராக நடக்கப் பழகிடும்; அதுகண்டு, "என்றன் குழந்தை முடமல்ல' என்றே அம்மா மகிழ்ந்திடுவாள். 安 资 。欧 9 8

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மலரும்_உள்ளம்-1.pdf/104&oldid=859410" இலிருந்து மீள்விக்கப்பட்டது