பக்கம்:மலரும் உள்ளம்-1.pdf/112

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வண்ணங்கள் காட்டுது நமது கொடி. வானத்தை முட்டுது, நமது கொடி. எண்ணங்கள் ஊட்டுது நமது கொடி. என்னென்ன காட்டுது நமது கொடி ? தீரத்தைக் காட்டுது, சிகப்பு நிறம். தியாகத்தைக் காட்டுது. சிகப்பு நிறம். வீரத்தைக் காட்டுது, சிகப்பு நிறம். வெற்றியைக் காட்டுது, சிகப்பு நிறம். ஒளியினைக் காட்டுது, வெள்ளை நிறம். உண்மையைக் காட்டுது, வெள்ளை நிறம். தெளிவினைக் காட்டுது, வெள்ளை நிறம். ○ சிறப்பையும் காட்டுது, வெள்ளை நிறம். வளமையைக் காட்டுது, பச்சை நிறம். வறுமையை ஒட்டுது, பச்சை நிறம். குளுமையைக் காட்டுது, பச்சை நிறம். குறைவெலாம் ஒட்டுது, பச்சை நிறம். 氰}演

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மலரும்_உள்ளம்-1.pdf/112&oldid=859429" இலிருந்து மீள்விக்கப்பட்டது