பக்கம்:மலரும் உள்ளம்-1.pdf/118

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கட்டை அவிழ்த்து விட்டிடின், களித்துக் கன்று துள்ளிடும். வெட்ட வெளியில் சுற்றிடும் மிகவும் மகிழ்ச்சி கொண்டிடும். கூட்டைத் திறந்து விட்டிடின், _ குதித்துக் கிளியும் பறந்திடும். வாட்டம் நீங்கி வானிலே, வட்ட மிட்டுத் திரிந்திடும். மடையைத் திறந்து விட்டிடின் மகிழ்ந்து நீரும் பாய்ந்திடும். தடையில் லாது வேகமாய், 'தடத' டென்று ஓடிடும். புனித மான விடுதலை பெறவே அவைகள் துடிக்கையில், மனிதன் மட்டும் அடிமையாய் மண்ணில் வாழ நினைப்பதோ ?

  1. 11
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மலரும்_உள்ளம்-1.pdf/118&oldid=859440" இலிருந்து மீள்விக்கப்பட்டது