பக்கம்:மலரும் உள்ளம்-1.pdf/123

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தூங்கு கின்ற போதிலே, துயரம் எதுவும் இல்லையே. ஏங்கச் செய்யும் எண்ணமும் எழுவ தில்லை, இல்லையே! ஏழை, அடிமை என்றெலாம் எவரும் இகழ்வ தில்லையே. நாளை வாழ்வைப் பற்றியும் நமக்குக் கவலை இல்லையே. பயமும், பகையும் இல்லையே. பணத்துக் கவலை இல்லையே. தயவு வேண்டி எவரையும் தாங்கத் தேவை இல்லையே. அமைதி நமக்கு அளிப்பதும், அசதி நீங்கச் செய்வதும் இமையை மூடித் தூங்கிடும் இன்ப மான துரக்கமே. ††6

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மலரும்_உள்ளம்-1.pdf/123&oldid=859452" இலிருந்து மீள்விக்கப்பட்டது