பக்கம்:மலரும் உள்ளம்-1.pdf/128

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஒட்டுக் கேட்டு ரகசியம் ஊரில் எங்கும் சொல்லுதல் கெட்ட குணத்தில் ஒன்றடா. கேட்பாய்; இன்னும் கூறுவேன். வேறு ஒருவர் பெயருக்கு விலாச மிட்ட கடிதத்தை யாரும் அறியா வேளையில் எடுத்துப் பார்த்தல் கெடுதலாம். நண்பன் குற்றம் செய்திடின் நயந்து கூறித் திருத்தலாம். புண்ப டுத்தும் முறையிலே போதித் திடுதல் கெடுதலாம். ஆட்டம் தன்னில் தோற்றிடின் ஆத்தி ரம்நீ கொள்வதேன்? வாட்ட மாக முகத்தினை வைத்துக் கொள்ளல் கெடுதலாம்.

  1. 21
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மலரும்_உள்ளம்-1.pdf/128&oldid=859461" இலிருந்து மீள்விக்கப்பட்டது