பக்கம்:மலரும் உள்ளம்-1.pdf/135

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பெரிதாய் வளர்ந்துநிலா, தம்பி-இன்பப் பேரொளியை வீசுதடா தம்பி. பெரியோர் தொடர்பும் அதுபோலே-மிக்கப் பெருமை வளர்க்குமடா தம்பி. சிறிது சிறிதாகத் தம்பி-நிலா தேய்ந்து மறையுமடா, தம்பி. சிறியோர் தொடர்பும், தம்பி-அந்தத் தேய்பிறையைப் போன்றதடா, தம்பி துன்பம் இன்பம்.இவைகள் போலே-நிலா தேய்ந்து வளர்ந்துவரும் தம்பி. துன்பம் இல்லாவிடிலோ தம்பி-இங்கு இன்பமும் இல்லையடா, தம்பி. i28

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மலரும்_உள்ளம்-1.pdf/135&oldid=859475" இலிருந்து மீள்விக்கப்பட்டது