பக்கம்:மலரும் உள்ளம்-1.pdf/154

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பெண்ணின் தாயார் இதுகேட்டுப் பெரிதும் வருத்தம் கொண்டாளாம். ஐயோ, தலைவிதி என்றெண்ணி அங்கும் இங்கும் நடந்தாளாம். 紫 வந்தவர் சாப்பிடப் பானையிலே வாங்கி வைத்த பாலையெலாம் சந்தடி யின்றி மாப்பிள்ளை சமையல் கட்டில் தீர்த்தாராம் ! திருடித் திருடிப் பாலையெலாம் தீர்த்துக் கட்டும் மாப்பிள்ளையைப் பார்த்து விட்டாள், பெண்தாயார்; பலத்த சத்தம் போட்டாளாம். உடனே அங்கே எல்லோரும் ஒன்றாய்க் கூடி வந்தனராம். மாப்பிள்ளைப் பூனை வழியின்றி மத்தியில் நின்று விழித்தாராம். 宽 "திருட்டுப் பிள்ளைக்கு என்பெண்ணைத் திருமணம் செய்ய முடியாது !

  1. 46
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மலரும்_உள்ளம்-1.pdf/154&oldid=859513" இலிருந்து மீள்விக்கப்பட்டது