பக்கம்:மலரும் உள்ளம்-1.pdf/163

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பையன் : மான் : கிரீட்டை நோக்கிப் போகவா ? கல்லும் முள்ளும் குத்துமே ! அம்மா, அப்பா, பாட்டியை ஐயோ, விட்டு வருவதோ ? இருட்டிப் போனால் விளக்குமே இல்லை அந்தக் காட்டிலே. சிங்கம், கரடி, புலியுமே சீறி வந்து கடிக்குமே. அப்ப டித்தான் எனக்குமே அதிகக் கஷ்டம் இல்லையோ ? சுற்றத் தார்கள் வருவரோ ? துள்ளிச் சுற்ற முடியுமோ ? ஆசை கொண்ட உணவையும் அடைந்து தின்னக் கூடுமோ ? கழுத்து நோக என்னையார் காட்டில் கட்டிப் போடுவார் ? 安 இதனைக் கேட்ட அவன்மனம் இளகிப் போச்சு மெத்தவும், "ஐயோ, பாவம், ஐயையோ ! அவிழ்த்து விட்டேன், ஓடிடு" 155

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மலரும்_உள்ளம்-1.pdf/163&oldid=859533" இலிருந்து மீள்விக்கப்பட்டது