பக்கம்:மலரும் உள்ளம்-1.pdf/166

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஆட்டம் போட்டு வீட்டினையே அதிரச் செய்தது, புலியோலே. பாட்டி அங்கே வந்திடவே பாய்ந்தது பூனை அவள்மீதும் ! பாட்டி கோபம் கொண்டனளே. பக்கம் கிடந்த துடைப்பத்தால் போட்டாள் பூனை தலைமேலே, 'பொத்தென உதைகள், புத்திவர அடியைத் தாங்க மாட்டாமல் அங்கே பூனை படுத்த துவே. 'கொடிய புலியாய் எண்ணியதே குற்றம் குற்றம் குற்றம்தான் ! பூனை என்றும் பூனைதான். புலியாய் மாற முடியாது' தானே இப்படி எண்ணியதே; சாது வாக மாறியதே !

  1. 53
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மலரும்_உள்ளம்-1.pdf/166&oldid=859539" இலிருந்து மீள்விக்கப்பட்டது