பக்கம்:மலரும் உள்ளம்-1.pdf/177

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

குஞ்சு வளர்ந்து சிலநாளில் கோழி யாகும். அக்கோழி தினமும் முட்டை இட்டுவரும் தின்ன லாமே இருபேரும்" என்றனள், அவனும் சரியென்றான். என்னுடை உயிரும் தப்பியது! மஞ்சள் தாதைத் தின்றேநான் வளர்ந்தேன், அந்த முட்டைக்குள். அடியேன் முட்டைக் குள்ளேயும், அம்மா முட்டை மேலேயும் இருந்தோம், மிக்கப் பொறுமையுடன். இருபத் தொருநாள் ஆயினவே. எத்தனை நாள்தான் அடைபட்டு இருப்பது என்றே கோபமுடன் மூக்கால் முட்டையின் ஒட்டினைநான் முட்டி உடைத்து வெளிவந்தேன். வந்ததும், என்னை என்.அம்மா மகிழ்ச்சி யோடு வரவேற்றாள். நாட்கள் வளர இறக்கையுடன் நானும் வளர்ந்து நடைபோட்டேன். 469

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மலரும்_உள்ளம்-1.pdf/177&oldid=859561" இலிருந்து மீள்விக்கப்பட்டது