பக்கம்:மலரும் உள்ளம்-1.pdf/216

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

எத்திசையும் சுற்றிக் காற்றொருநாள்-அங்கு எமனைப் போலவே வந்ததடா. எத்தனையோ உயிர் மாண்டிடவே-மிக்க இன்னல் புரிந்துமே சென்றதடா. எண்ணரும் உயிர்கள் எத்தனையோ-அதில் இன்புற்ற வாழ்வினை நீத்தனவே. கண்ணினைப் போன்றநம் ஆலமரம்-அந்தக் கணக்கில் ஒன்றெனச் சேர்ந்ததுவே ! வேரற்று அம்மரம் வீழ்ந்ததுவே-பெரும் வீரனைப் போலக் கிடந்ததுவே. ஊரினர் யாவரும் கூடிவந்தே-அதன் உன்னத நன்மையைப் பேசினரே. அத்தனை மக்களும் வாடினரே-"இது ஐயோ போனது ' என்றனரே. இத்தலம் விட்டே போய்விடினும்-அது எல்லார் உள்ளத்தும் நின்றதுவே ! 208

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மலரும்_உள்ளம்-1.pdf/216&oldid=859642" இலிருந்து மீள்விக்கப்பட்டது