பக்கம்:மலரும் உள்ளம்-1.pdf/232

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

எனது சொல்லைக் கேட்டிடுவாய். எளிதில் காரியம் முடிந்துவிடும். வண்டியை அருகே நிறுத்திடுவாய், மரத்தை அடியில் வெட்டிடுவாய். வெட்டிய மரத்தை வண்டியிலே வீழ்ந்திடும் படிக்குச் செய்திடுவாய். எப்படி எனது யோசனை ? சொல்" என்றே வேலன் கேட்டிடவே, ‘சரி,சரி' என்றே அம்மனிதன், தலையை ஆட்டி மகிழ்வுடனே, வண்டியை அருகில் நிறுத்தினனே, மரத்தை வெட்டிச் சாய்த்தனனே. "படபட" என்ற சத்தமுடன் 'பட்டேன மரமும் சாய்ந்ததுவே. மரத்தின் பளுவைத் தாங்காமல் வண்டியும் அப்பளம்' ஆனதுவே! 224

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மலரும்_உள்ளம்-1.pdf/232&oldid=859678" இலிருந்து மீள்விக்கப்பட்டது