பக்கம்:மலரும் உள்ளம்-1.pdf/238

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

படுத்து உறங்கும் போதிலே பயமில் லாமல் என்னையே கடித்து எழுப்பும் மூட்டையே, காலம் கிட்டி விட்டதோ ? இரத்தம் உடலில் ஊறவே, ஏது, ஏதோ மருந்துகள் சிரத்தை யோடு தின்பதும் தினமும் உன்னை வளர்க்கவோ ? இரவில் விழிக்கச் செய்கிறாய். இரத்த மெல்லாம் குடிக்கிறாய். பரவும் உன்றன் வம்சமே படுத்தும் பாடு கொஞ்சமோ ? இருக்கும் இடத்தைத் தேடியே இச்சை யோடு வருகிறாய். 'நறுக்கு, நறுக்கு' என்றுநீ நன்கு கடித்து விடுகிறாய். 229

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மலரும்_உள்ளம்-1.pdf/238&oldid=859684" இலிருந்து மீள்விக்கப்பட்டது