பக்கம்:மலரும் உள்ளம்-1.pdf/44

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சிங்கம் எங்கே பார்க்கிறாய்? சீறிப் பாய எண்ணமோ ? கொண்டு வந்து உன்னைத்தான் கூட்டில் போட்டு விட்டோமே ! வெள்ளி போலத் தலைமயிர் விரித்து நிற்கும் சிங்கமே, கொள்ளி போன்ற கண்களால் 'குறுகு' றென்று பார்ப்பதேன் ? கத்தி போன்ற நகங்களால் கம்பி யைத்தான் கீறலாம். உயிரைக் கொன்று கம்பியின் உடலைக் கிழிக்க முடியுமோ? மிருக ராஜ சிங்கமே, மிரட்டி ஏனோ பார்க்கிறாய்? கூட்டை விட்டு வரவேதான் பூட்டுப் போட்டி ருக்குதே! ఢీ

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மலரும்_உள்ளம்-1.pdf/44&oldid=859755" இலிருந்து மீள்விக்கப்பட்டது