பக்கம்:மலரும் உள்ளம்-1.pdf/69

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாட்டி, பாட்டி, ஒடிவா. பறவைக் கப்பல் மேலேபார். வீட்டு மேலே 'விர்'ரென வேக மாகப் போகுதே ! காட்டைத் தாண்டிச் செல்லுமாம். கடல் கடந்து போகுமாம். பாட்டி யைப்போல் அண்ணாந்து பலரும் பார்க்கப் பண்ணுமாம் ! பாட்டி, பாட்டி இதனைப்போல் பறவைக் கப்பல் முன்பெலாம் பாட்டன், பாட்டி யாரேனும் பார்த்த துண்டோ சொல்லுவாய் ? பாட்டி, நீயும், நானுமே பறவைக் கப்பல் ஏறியே, வீட்டை விட்டுச் செல்லுவோம். வெளியி டாதே, ரகசியம் ! 64

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மலரும்_உள்ளம்-1.pdf/69&oldid=859805" இலிருந்து மீள்விக்கப்பட்டது