பக்கம்:மலரும் உள்ளம்-1.pdf/74

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாட்டி எங்கள் பாட்டி-எல்லாப் பல்லும் போன பாட்டி. கேட்கக் கேட்கக் கதைகள்-இன்னும் கேட்கச் செய்யும் பாட்டி. கடின மான பண்டம்-அதைக் கடிக்கத் தெரியாப் பாட்டி. படிப்பே யில்லாப் பாட்டி-ஆனால், பலவும் தெரிந்த பாட்டி. விடுக தைகள் போட்டே-என்னை விழிக்க வைக்கும் பாட்டி. குடுகு டுவய தாச்சு-கையில் கோல்பி டிக்கும் பாட்டி. அப்பா அடித்துப் போட்டால்-என்னை - அணைத்தே தேற்றும் பாட்டி. தப்போ, தவறோ செய்தால்-என்னைத் தடுத்துத் திருத்தும் பாட்டி $9

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மலரும்_உள்ளம்-1.pdf/74&oldid=859817" இலிருந்து மீள்விக்கப்பட்டது