பக்கம்:மலரும் உள்ளம்-1.pdf/8

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சின்னஞ் சிறுவர் சிறுமியர்க்குச்
சிறந்த கருத்தைத் தெளிவாகக்
கன்னல், செந்தேன், முக்கனிகள்
கலந்த இனிய சுவையோடு
மன்னும் கவிதை மனம்வீசி
'மலரும் உள்ளம்' என்றென்றும்
பன்னற் கரிய புகழ்பெற்றிப்
பாரில் வாழ்க, வாழ்கவே.


கன்னற் கவியால், கவிக்கிசைந்த சித்திரத்தால்
தன்னிகரில் இந்நூலைத் தந்தனனே----

மன்னுபுகழ்ப்

பள்ளிச் சிறுவரொடு பண்டிதரும் பாராட்ட
வள்ளியப்பன் உள்ளம் மகிழ்ந்து.


நித்தம் இளமை நிலைக்கும் படிஈசன்
வைத்தில னேஎன்று வருந்துகின்றேன்----

சித்தமகிழ்

சித்திரமும் பாட்டும் சிறந்து விளங்கிடுமிப்

புத்தகத்தைப் பார்க்கும் பொழுது.

6

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மலரும்_உள்ளம்-1.pdf/8&oldid=1299754" இலிருந்து மீள்விக்கப்பட்டது