பக்கம்:மலரும் உள்ளம்-1.pdf/84

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அப்பா வைப்போல் பெரியவனாய் ஆன வுடனே நானுமே, தச்ச னாகக் கதவு, தூண்கள் சன்னல் பலவும் பண்ணுவேன். மெச்சும் படியாய் வண்டி, கலப்பை, மேஜை களையும் செய்குவேன். அப்பா வைப்போல் பெரியவனாய் ஆன வுடனே நானுமே, கருமா னாக இரும்பி னாலே கம்பி, வளையம், கத்திகள் அருமையான பூட்டு, சாவி, அத்த னையும் பண்ணுவேன். ஐவரும் ஒத்துச் சேர்ந்து எங்கள் தொழிலை ஊக்க மாய் நடத்துவோம். சத்தி யத்தைக் கடைப்பி டித்துச் சகல ருக்கும் உதவுவோம். 78

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மலரும்_உள்ளம்-1.pdf/84&oldid=859838" இலிருந்து மீள்விக்கப்பட்டது