பக்கம்:மலரும் உள்ளம்-1.pdf/9

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சொல்லின் செல்வர் ரா. பி. சேதுப்பிள்ளை அவர்களின் 象 - அணிந்துரை இனிய தமிழ்ப் பாட்டால் உள்ளத்தை அள்ளும் கவித்திறம் வாய்ந்தவர் திரு. வள்ளியப்பா. பிஞ்சு மனத்திற்கு உகந்த செஞ்சொற் கவிஞர் அவர். 'மலரும் உள்ளம் என்னும் இந்நூல் ஒரு கவிதைப் பூஞ்சோலை. அங்கே அரும்பு மலர்ந்து விரியும்; அருணன் கதிரைச் சொரியும், சின்னஞ் சிறு குருவி பறக்கும் பென்னம் பெரிய யானை நடக்கும். பத்துமாதக் குழந்தை தத்தித் தவழும் பஞ்சுக்கால் பூனை பையச் சென்று பாலைக் குடிக்கும்; புத் அறமுறைப்பார்; பாரதியார் பாட்டிசைப்பார். கண்ன காந்தியும் காட்சி தருவர். அச்சோலையில் நல்ல ஆர்ேகள் நறுமணங் கமழும். மன மில்லாத மலரினை மகிழ்ந்து எவரும் அணிவரோ ? என்று கேட்கின்றார் கவிஞர். கனகாம்பரம் சூடி மகிழும் கன்னி இதற்கு என்ன மாற்றம் உரைப்பாளோ? இம். உயர்ந்த உண்மைகளைப் பிள்ளையுள்ளத்திற் கேற்பப் படிப்படியாக உணர்த்துகின்றார் இக்கவிஞர். தமிழ்க் கவிதையிலே அன்பின் தன்மை பரக்கப் பேசப்படுகின்றது. திருவள்ளுவர் முதலாய தலைமைக் கவிஞர்கள் "உலக வாழ்விற்கு அன்பு இன்றியமையாதது என்னும் உண்மையைப் பலவாறாகப் பாடி புள்ளனர். இவ்வுண்மையைக் குழந்தைகளுக்கு ஏற்ற முறையில் கூறுகின்றார் இக்கவிஞர். பிள்ளைகள் கண்டு அறிந்துள்ள நகைகளையும், மலர்களையும் ஒன்றன்பின் ஒன்றாய் நினைவூட்டி இறுதியாக, அன்பின் நலங்களைக் கூறுகின்றார், கவிஞர். பட்டை போடப் போடத்தான் பளப ளக்கும் வைரமே. மெருகு கொடுக்கக் கொடுக்கத்தான் மினுமி னுக்கும் தங்கமே. அரும்பு மலர மலரத்தான் அளிக்கும் மனத்தை மலருமே. அன்பு பெருகப் பெருகத்தான் அமைதி அடையும் உலகமே. 7

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மலரும்_உள்ளம்-1.pdf/9&oldid=859849" இலிருந்து மீள்விக்கப்பட்டது