பக்கம்:மலரும் உள்ளம்-1.pdf/99

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இனிப்பில் லாத கரும்பினை எவரும் விரும்பித் தின்பரோ ? இசையில் லாத பாட்டினை எவரும் விரும்பிக் கேட்பரோ ? மனமில் லாத மலரினை மகிழ்ந்து எவரும் அணிவரோ ? நிழல்த ராத மரத்தின்கீழ் நிற்க எவரும் வருவரோ ? தண்ணி ரில்லாக் குளத்திலே தாகம் தீர்க்கச் செல்வரோ ? அன்பில் லாத மனிதரை யார்தான் விரும்பப் போகிறார் ? 93

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மலரும்_உள்ளம்-1.pdf/99&oldid=859865" இலிருந்து மீள்விக்கப்பட்டது