பக்கம்:மலரும் உள்ளம்-2.pdf/14

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நாளைக்குப் பள்ளிக் கூடத்திலே இராமகிருஷ்ணர் பிறந்த நாள்" என்றான். - "உண்மையாகவா?” என்று நான் கேட்டுவிட்டேன். உடனே அவன், "என்னப்பா இப்படிக் கேட்கிறாய்? நான் திங்கட்கிழமை பிறந்த பிள்ளை. தினமும் உண்மை பேசிடுவேன்” என்று பெருமையோடு சொன்னான். - - இதைக் கேட்டதும் நான் அடைந்த மகிழ்ச்சிக்கு அளவே இல்லை. "அடே, நம் பாட்டு குழந்தைகளின் குணத்தை உருவாக்கவும் உதவும் போலிருக்கிறதே!” என்று எண்ணி எண்ணி மகிழ்ந்தேன். இந்த நிகழ்ச்சியை நான் கூற முற்பட்டதற்குக் காரணம் வேறொன்றுமல்ல; நான் எழுதியுள்ள பல குழந்தைப் பாடல்கள் குழந்தைகளிடமிருந்தே உருவாயின என்பதை எடுத்துக்காட்டவேதான். 'குழந்தைகளுடன் நெருங்கிப் பழகும்போது நமக்கும் குழந்தை உள்ளம் உண்டாகிறது. நாமும் குழந்தையாகி விடுகிறோம். அப்போது நம் உள்ளத்தில் தோன்றும் பாடலே குழந்தைப் பாடலாக அமைகிறது என்று நான் நினைக்கிறேன். குழந்தைகளுக்குப் பாடல் எழுதும் மற்றக் கவிஞர்களுடைய அனுபவமும் இப்படித்தான் இருக்குமெனக் கருது கிறேன். - மலரும் உள்ளம் - இந்தப் பெயரைப் பார்த்ததுமே கவிமணி தேசிக்விநாயகம் பிள்ளையவர்களின் முகம் மலர்ந்தது. "அழகான பெயர். குழந்தைகள் நூலுக்கு மிகவும் பொருத்தமான பெயர்” என்று மகிழ்ச்சியோடு கூறினார்கள். - "அழகான பெயர்தான். ஆனால், இந்தப் பெயரை நான் வைக்கவில்லை. ஆர். எம். முத்தையா என்ற என் நண்பர் தான் இப்பெயரிட்டார்” என்றேன். "மிகவும் நல்ல பெயர். இது மலர்கின்ற உள்ளங்களுக்காக எழுதப்பட்டதுதானே!" என்று மீண்டும் உரைத்தார்கள். - ஏழு ஆண்டுகளுக்கு முன்பு, மலரும் உள்ளம் என்ற என் முதல் கவிதைத் தொகுதிக்கு வாழ்த்து வழங்கியபோது தான் கவிமணியவர்கள் இவ்வாறு கூறினார்கள். அவர்கள் மனத்திற்குப் பிடித்தமான 'மலரும் உள்ளம் என்ற பெயரையே இத்தொகுதிக்கும் வைப்பது நல்லதென நண்பர்களும் நானுமாகச் சேர்ந்து முடிவு செய்தோம். முதல் தொகுதிக்குத் 41

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மலரும்_உள்ளம்-2.pdf/14&oldid=859951" இலிருந்து மீள்விக்கப்பட்டது