பக்கம்:மலரும் உள்ளம்-2.pdf/16

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வியந்தேன். இதில் அவர்களைப் பின் பற்றுவது நலமென உணர்ந்தேன் அச்சுக்குக் கொடுப்பதற்கு முன்பு என் பாடல்களில் ஐந்து பிரதிகள் எடுத்தேன். நண்பர்கள் சிலரிடம் கொடுத்துப் படித்துப் பார்த்துத் தங்கள் கருத்துக்களைத் தெரிவிக்குமாறு கேட்டுக் கொண்டேன். கவிஞர் சோமு, புலவர் தணிகை உலகநாதன், கவிஞர் தமிழழகன், புலவர் அ. அப்துல் கரீம், தம்பி சீனிவாசன் முதலியவர்கள் தங்களது பல வேலைகளுக்கிடையே இப்பாடல்களைப் படித்துப் பார்த்து, பல அரிய யோசனைகளைக் கூறினர். இப்புத்தகம் நல்ல முறையில் அச்சாகி வெளிவருவதற்குப் பல்வகையிலும் உதவிய நண்பர்கள் பலர். அவர்களில் திருவாளர்கள் க. அ. செல்லப்பன் (பாரி நிலைய அதிபர்), ரத்னம், வெ.சுப. நடேசன் (புதுகோட்டைத் தமிழ் நிலைய அதிபர்) முதலியோரை முக்கியமாகக் குறிப்பிட வேண்டும். இப்புத்தகத்திலுள்ள பாடல்களில் ஒரு சிலவற்றைத் தவிர மற்றவை யாவும் அவ்வப்போது பத்திரிகைகளில் வெளிவந்தவையே. இப்பாடல்களைத் தங்கள் பத்திரிகைகளில் நல்ல முறையில் படங் களுடன் வெளியிட்டு குழந்தைகள் அவற்றைப் படிப்பதற்கு வாய்ப் பளித்த கண்ணன்', 'கல்கி', 'ஆனந்த விகடன், உமா, 'கலைமகள், 'கலைக்கதிர் முதலிய பத்திரிகை ஆசிரியர்களுக்கும், வானொலி மூலம் சில பாடல்களை ஒலி பரப்பிய வானோலி நிலையத்தாருக்கும் நான் பெரிதும் கடமைப்பட்டுள்ளேன். மேலும், இத்தொகுப்பு நன்முறையில் வெளிவர, பல்வேறு கட்டங்களிலும், ஆர்வமுடன் உதவியவர் பலர். அவர்கள் ஒவ்வொருவருக் கும் என் மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்ளுகிறேன். குழந்தைகள் இன்பமே எனது இன்பம். அவர்களுக்குத் தோண்டு செய்வதே என் முக்கிய குறிக்கோள். வணக்க ம சென்னை 21.7.61 - அழ. வள்ளியப்பா 13

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மலரும்_உள்ளம்-2.pdf/16&oldid=859988" இலிருந்து மீள்விக்கப்பட்டது