பக்கம்:மலரும் உள்ளம்-2.pdf/177

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காசிக்குத் தாத்தாவும் சென்றுவந்தார் - உடன் களிப்போடு பிள்ளைகள் சூழ்ந்துகொண்டார். ஆசையாய்க் கூடியே பேசுகையில் - அங்கே ஆனந்தன் தாத்தாவைக் கேட்கலுற்றான். "அத்தையும் காசிக்குச் சென்றுவந்தாள் - இனி அவரைக்காய் தின்பதே இல்லையென்றாள். சித்தப்பா காசிக்குச் சென்றுவந்தார் - இனி சிகரெட் பிடிப்பதே இல்லையென்றார். பாட்டியும் காசிக்குச் சென்றுவந்தாள் - இனி பாகற்காய் தின்பதே இல்லையென்றாள். சீட்டாடும் பழக்கத்தை விட்டேனென்றார் - காசி சென்று திரும்பிய மாமாவுமே. இப்படிக் காசிக்குச் சென்றோரெல்லாம் - அங்கே ஏதேனும் ஒன்றினை விட்டுவந்தார். அப்படி நீயுமே விட்டதென்ன? - தாத்தா. அவசியம் கூறிட வேண்டு”மென்றான். 172

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மலரும்_உள்ளம்-2.pdf/177&oldid=860008" இலிருந்து மீள்விக்கப்பட்டது