பக்கம்:மலரும் உள்ளம்-2.pdf/198

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சென்றன இரண்டு நாட்களுமே. சீமான் நிலைமை அறிந்திடவே, வெளியில் கிளம்பிச் சென்றனரே, வீதிகள் எங்கும் சுற்றினரே, ஒவ்வொரு கடையாய்ப் பார்த்தனரே. ஒன்றிலும் இல்லை அவர்படமே எல்லாக் கடையிலும் தேடினரே. எங்கும் மேற்படி மேற்படியே! எப்படிப் போயின படங்களெலாம்? என்றே அவரும் எண்ணுகையில், அருகில் ஒர்கடை முதலாளி, அவரது நண்பர் ஒருவரிடம் கூறிய வார்த்தைகள் அவர்காதில் கூரிய வேல்போல் பாய்ந்தனவே: "ஊர்பெயர் தெரியா ஒருவனது உருவப் படத்தை ஒருமடையன் கண்ணா டியுடன் என்னிடத்தே கடையில் மாட்டத் தந்திருந்தான். i83

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மலரும்_உள்ளம்-2.pdf/198&oldid=860031" இலிருந்து மீள்விக்கப்பட்டது