பக்கம்:மலரும் உள்ளம்-2.pdf/232

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

துணைநிற்கும் இச்சங்கத்தின் பொதுச் செயலாளர் (1950-55) தலைவர் (1956-51) ஆலோசகர் (1961-67), மீண்டும் தலைவர். தமிழ் எழுத்தாளர் சங்கத் தலைவர் : 1956-ல் 'ஆனந்த விகடன் தேவன் அவர்கள் தலைவராயிருந்தபோது பொதுச் செயலாளரானார்.3 ஆண்டுகள் செயலாளராகவும், பிறகு துணைத் தலைவராகவும் இருந்து 1966-ல் தலைவராக ஒரு மனதாகத் தேர்ந்தெடுக்கப் பெற்றார். சென்னைப் பல்கலைக் கழகத்தில் சொற்பொழிவு : 1979 அக்டோபரில் 'கல்கி ரா. கிருஷ்ணமூர்த்தி நினைவு அறக்கட்டளைக் சொற்பொழிவாக வளர்ந்து வரும் குழந்தை இலக்கியம் என்ற தலைப்பில் 3 நாட்கள் பேசினார். இப்பேச்சு பின்னர் புத்தகமாக வெளி வந்துள்ளது. தென் மொழிப் புத்தக டிரஸ்டில் பணி : ஃபோர்ட் ஃபுண்டேஷன் நிறுவிய தென்மொழிப் புத்தக டிரஸ்டின் குழந்தைப் டத்தக அலுவலராக 5% ஆண்டுகள் (1957-62) பணிபுரிந்து தென் மொழிகள் நான்கிலும் பல சிறந்த நூல்கள் வெளிவந்து பரிசுகளும் பாராட்டுகளும் பெற உதவினார். - பாராட்டு : - 1961-ல் நடந்த மூன்றாவது குழந்தை இலக்கிய மாநாட்டில், டாக்டர் ஜாகீர் ஹசைன் அவர்கள் கேடயம் வழங்கிக் கெளரவித்தார். 1963-ம் லக்னோவில் நடந்த அனைத்திந்திய குழந்தை எழுத்தாளர் மாநாட்டில் தமிழில் குழந்தை இலக்கிய முன்னோடி என்ற பாராட்டும் பதக்கமும் வழங்கப் பெற்றன. கிண்டி ராஜ்பவனில் நடந்த குழந்தை எழுத்தாளர் சங்க வெள்ளி விழாவில் (18-4-77) அச்சங்கத்தை நிறுவியவர் என்ற முறையிலும், சங்கத் தலைவர் என்ற முறையிலும் குடியரசுத் தலைவர் ஃபக்ருதீன் அலி அகமத் அவர்கள் பொன்னாடை போர்த்திக் கேடயம் வழங்கிச் சிறப்பித்தார். 1975-ல் தமிழ்க் கவிஞர் மன்றம் நடத்திய முதல் மாநாட்டில் கேடயம் வழங்கப் பெற்றது. கவிமணி, ராஜாஜி, கல்கி, டாக்டர் ரா. பி. சேதுப் பிள்ளை, டாக்டர் மு. வ, நாமக்கல் கவிஞர், பேராசிரியர் வையாபுரிப் பிள்ளை, ஐயன் பெருமாள் கோனார், தி. ஜ. ர, கொத்தமங்கலம் சுப்பு, டாக்டர் எஸ். ஆர். ரங்கநாதன் ஆகியோரது பேரன்பையும் பாராட்டையும் பெற்றவர். 226

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மலரும்_உள்ளம்-2.pdf/232&oldid=860069" இலிருந்து மீள்விக்கப்பட்டது